கன்னியாகுமரியில் ஜூன் 5 முதல் படகு கட்டணம் உயர்வு. சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் இப்போதைய செருப்பு கட்டணமும் அடுத்து
உயருமா.?

குமரியில் கடலில் அமைந்துள்ள நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாறை ஆகியவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு பயண கட்டணம் ஜூன் 5 ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. சாதாரண பயணிகளுக்கான கட்டணம் ₹75 லிருந்து ₹100 ஆக உயருகிறது. மாணவர்களுக்கு சலுகை கட்டணம் ₹ 30_யில் இருந்து ₹40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணப் படகு ₹300ல் எந்த மாற்றமும் இல்லை.
இந்த உயர்வு சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில்,கோடை விடுமுறை காலங்களில் பல மணி நேரம் சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்து நிற்கும் நிலைக்கு என்று விடிவுகாலம்.?
ஆன் லைனில் டிக்கெட் பதிவு எப்போது.? இந்த கேள்விக்கான பதில். படகு கட்டணம்
உயர்வு அமலுக்கு வரும் ஜூன் 5-ம் தேதியில் நடைமுறைப்படுத்தப்படுமா?
உள்ளூர், முதல் உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் கேள்வியாக இருக்கிறது.