• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பிருந்தா கேட்ட அனுமதி! ஆமோதித்த இயக்குனர் மணிரத்னம்..

பல வருடங்களாக நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா முதன்முறையாக ‘ஹே சினாமிகா’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்துள்ளார். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 3ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்திற்கான தலைப்பு மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற ஏய் சினாமிகா என்கிற பாடல் வரிகளில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த வார்த்தைகளை தலைப்பாக ஏன் வைத்தேன் என்றும் அதுகுறித்து மணிரத்னத்திடம் தான் பேசியதையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிருந்தா மாஸ்டர். சினமிகா என்றாலே கோபப்படுகிற பெண் என்று அர்த்தம். என்னுடைய கதைக்கு அதுதான் பொருத்தமான பெயராக தோன்றியது. தலைப்பை முடிவு செய்ததும் இந்த விஷயத்தை மணிரத்னத்திடம் போன் செய்து கூறினேன். நான் சொன்னதைக் கேட்டு சிரித்தவர், தாராளமாக வைத்துக்கொள்.. அப்படியே எனக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன் என்று கூட போட்டுக்கொள் என தமாஷாக கூறினார் என்று கூறியுள்ளார் பிருந்தா மாஸ்டர்.