• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மும்மொழி படங்களில் நடிக்கும் தமன்னா!

தெலுங்கு, இந்தி படங்களிலும், வலைதொடர்களிலும் பிசியாக நடித்து வரும் நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷாலுடன் ஆக்சன் படத்தில் நடித்தார். அதன்பிறகு புதிய பட வாய்ப்புகள் தமிழில் அவருக்கு கிடைக்கவில்லை. தற்போது சிரஞ்சீவியுடன் போலா ஷங்கர் படத்தில் நடித்து வரும் தமன்னா, அடுத்தப்படியாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாரிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்தி இயக்குனர் மதூர் பண்டார்கர் இயக்கும் இந்த படத்திற்கு பாப்லி பவுன்சர் என்று இந்தியில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமன்னாவுடன் சவுருப் சுக்லா, அபிஷேக் பஜாஜ். சாகில் ஆகியோரும் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தின் தமிழ் தெலுங்கு தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.