ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் இன்பத் தமிழன் தலைமையில் திடீரென ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் பெரிய சொசைட்டி அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் சுமார் ஒரு மணி அளவில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் 2:30 மணி வரை நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியல் போராட்டக்காரர்களுடன் தாசில்தார் அருளானந்தம் நகர் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் கைதுறை துறை ஏடி சேரன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒன்னரை மணி நேரத்திற்கு பிறகு நெசவாளர் சமாதானம் அடைந்து தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். நெசவாளர்களின் தொடர் போராட்டத்தினால் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நேற்று முழுதும் பரபரப்பான சூழல் நிலவியது.




