தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரியார் என்றால் முதலில் கடவுளை எதிர்த்தார், தன்னை விட வயதில் சிறிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார், தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என உருவகப்படுத்தினார்கள். இந்த மூன்று கோட்பாடுகளையும் தான் மேடைக்கு மேடை மூச்சரிக்க பேசி பெரியார் ஆதரவாளர்களை விட அதிகமாக வலது சாரிகள் பெரியாரை வளர்த்து வருகின்றனர்.
இதன் தாக்கம் யார் இந்த பெரியார் ? இவரை ஏன் இப்படி எதிர்க்கிறார்கள் ? ஈ.வெ.ரா என்று கூறினாலே ஏன் பதட்டமடைகின்றனர் என்று இளைய சமுதாயம் பெரியாரை தேட ஆரம்பித்தது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் கட்சியினர் கூட பெரியாரை மறந்துவிட்டு தற்கால அரசியல் பேசலாம்,ஆனால் ஒரு சித்தாந்த ரீதியாக கொள்கை ரீதியாக பெரியார் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு நீண்ட நெடிய பயணத்தை நாம் பயணிக்க வேண்டும்.
சரி நம்மால் நீண்ட பயணம் மேற்கொள்ள முடியாது .பயணத்தின் போது இளைப்பாறுவதற்கு டீக்கடையில் அமர்ந்து டீ குடிக்கும் நேரத்தில் பெரியார் குறித்த சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அந்த விஷயங்களும் இளைப்பாறுவதற்கு குடிக்கும் டீயும் உங்களை பயணத்தை சுறு சுறுப்பாக்கும். மேலே கூறிய மூன்று விஷயங்களை பெரியார் கூறினார்.அது எந்த காலத்தில் எந்த சூழ்நிலையில் கூறியது என்று பலரும் கூறி இருப்பார்கள். அது ஒரு புறம் இருக்கட்டும் பெரியாரின் முக்கியமான பயணம் சமத்துவம் ,சகோதரத்துவம் , மனிதநேயம் இவைகளை அடிப்படையாக கொண்டது தான்.
இந்த பயணத்தின் போது அவர் சந்தித்த தடங்கள் தான் சாதி ,மதம் ,கடவுள் இவை எல்லாம். பெரியாரின் கருத்துகளை கம்யூனிஸ்த்தனுடன் ஒத்து போகும் பலர் நினைப்பர். ஆனால் கம்யூனிசத்தின் தந்தை என போற்றப்படும் மார்க்ஸ் கருத்துகளில் முரண்டுபடுவார் பெரியார். காரணம் மேற்கத்திய நாடுகளில் கம்யூனிசம் பரவிய நேரத்தில் பெரியார் “ அங்கு உள்ள பிரதான பிரச்சனை ஏழை பணக்காரன், முதலாளி தொழிலாளி இவை தான் ஆனால் இங்கு நம் நாட்டில் அந்த பிரச்சனைக்குமுன் வேறொரு உருவம் சாதி மதம் என்று இருக்கிறது.
இது தான் இங்கு முதன்மை பிரச்சனை ஒரு ஏழையிடம் உழைப்பிற்கு ஏற்ப பணம் கொடுத்து அவனை முதலாளியாக, பணக்காரனாக விடலாம், ஆனால் இங்கு நீங்கள் தலைகீழாக நின்றாலும் கீழ்சாதியை சேர்ந்தவனை பணக்காரனாக மாற்றினாலும், அவன் கோயிலுக்கு செல்ல முடியாது.சரி சமமாக அமர முடியாது, தண்ணீர் குடிக்க முடியாது. இதற்கு நீங்கள் கூறும் மார்க்சியம் எடுபடாது அதனை எங்கள் மண்ணிற்கு ஏற்ப நாங்கள் மாற்றுவோம் என்று கூறினார் அது தான் பெரியார் வகுத்த வழி.
அதற்கு ஒரு சிறந்த உதாரணம் மாவோ. இவர் நேபாளத்திலிருந்து ஒரு கம்யூனிச கல்வியாளர் குழு ஒன்று செல்கிறது அவர்களிடம் மாவோ சொல்கிறார் “சாதாரண மக்களிடம் இருந்து நாம் கற்றுத் தெரிந்ததை தவிர நம்மிடம் வியக்கத்தக்கது ஏதுமில்லை.நாம் சிறிதளவு மார்க்சிய லெனினியம் கற்றிருந்தாலும் மார்க்சிய லெனினியம் மட்டுமே பயன்படாது. of course we have learnt a little Marxism and Leninism, but Marxism and Leninism alone won’t do என்று கூறினார்.
அதாவது நாம் சீனாவின் உண்மைகளை மற்றும் பண்புகளிலிருந்து சீனப்பிரச்சனைகளை ஆராய்ந்தாக வேண்டும் என்பதை நான் கொள்கையாக கொண்டேன்.நான் படித்தேன் கருத்துகளை வைத்திருக்கிறேன். ஆனால் சீனாவின் நிலைகளிலிருந்து தான் இந்த புரட்சி தொடங்க முடியும் என்பதை அறிந்து கொண்டேன், மக்களிடமிருந்து தெரிந்த கொண்டு தான் போராட்டத்தை கட்டினேனே தவிர வெறும் அதில் சொன்னதை அப்படியே செய்யவில்லை. நீங்கள் உங்கள் நாட்டில் அதைச் செய்ய வேண்டுமென்றால் உங்கள் நாட்டு சூழலுக்காக மாற்றிகொள்ளுங்கள், ஆனால் நான் சொல்லுகிற அறிவுரைகளை எடுத்துகொள்ளாதீர்கள் இது தான் மாவோ மார்க்சியத்தை மாற்றிய வரலாறு .
இதனை தான் கொஞ்சம் மாற்றி யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும், பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே என்று பெரியார் கூறினார்.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]