



மதுரை மாநகர் பகுதியான பொன்மேனி ஜெய்நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பான அக்ஷராஸ்ரீ தனியார் குடியிருப்பில் 4 மாடி கட்டிடம் அமைந்துள்ளது.

அந்த கட்டிடத்தில் லிப்டிற்குள் 4பேர் சிக்கியுள்ளதாக பெரியார் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து., சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் பெரியார் நிலைய தீயணைப்புத் துறையினர் ஸ்பெட்டர் இயந்திரங்கள் கொண்டு அரை மணி நேரம் போராடி லிப்டிற்குள் கைக்குழந்தையுடன் சிக்கித்தவித்த 3 ஆண், 2 பெண் என 6 பேரை மீட்டனர்.

நான்கு பேர் மட்டுமே பயணிக்க வேண்டிய அடுக்குமாடி குடியிருப்பு லிப்டில் 6 பேர் பயணித்ததால் அதிக எடை காரணமாக லிப்ட் நின்றதாக தீயணைப்புத் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

