


பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அஜித் : மதுரையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
இந்தியாவிற்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் தமிழ்நாட்டுக்கு எப்போது பெருமை சேர்க்க போகிறீர்கள்.

TN WELCOME YOU AK
என்ற பெயரில் மதுரை மாவட்டம் முழுவதும் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் நாளை வெளியாக உள்ள குட்நைட் அகலி திரைப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பன்ச் வசனங்களுடன் போஸ்டர் ஒட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பேசு பொருளாக இருக்கிறது.

மதுரையில் நகர் பகுதிகளுக்குள் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாங்க தல ஏகே என்று கையசைத்து அழைப்பது போன்று அதற்கு அஜித் விரைவில் மலை என கூறுவது போன்று வாசகங்கள் படத்துடன் இடம்பெற்றுள்ளது.

