



நாளை வெளியாக உள்ள அஜித் நடித்த திரைப்படம் காரில் ஸ்டிக்கர் ஒட்டி மதுரையில் இளைஞர் வலம் வரும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
சினிமாவுக்கும், அரசியலுக்கும் ஒரு தொடர்பு உண்டு. அந்த வகையில் மதுரையில் சினிமா ரசிகர்கள் ஒட்டக்கூடிய போஸ்டர்களும், அதில இடம் பெறக்கூடிய வசனங்களும் மிகுந்த வரவேற்பையும், அனைவருடைய கவனத்தையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் நாளை வெளியாக உள்ள நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தை மதுரை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.


குறிப்பாக, மதுரை காளவாசல் பகுதியில் உள்ள விக்னேஷ் என்ற இளைஞர் தன்னுடைய நான்கு சக்கர வாகனத்தில் நடிகர் அஜித் நடிப்பில் நாளை வெளியாக உள்ள திரைப்படத்தின் போஸ்டர்களை ஒட்டி மதுரையின் நகர் பகுதியில் மற்றும் புறநகர் பகுதிகளில் வலம் வந்து அந்த வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அஜித் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


