



கோடையில் நீர்ச்சத்து மிக்க தர்பூசணி பழங்களை உண்பதில் மக்களுக்கு அச்சம் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சுகாதாரத்துறையில் இளநிலை உதவியாளர் தட்டச்சர் பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு 391 பணி நியமன ஆணையை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக மீதமிருப்பவர்களுக்கான பணி நியமன ஆணை ஓமந்தூரார் பண்ணோக்கு மருத்துவமனையில் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கினார் .

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்..,
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் நிரப்பப்பட்ட அரசு பணியிடங்களை காட்டிலும் திமுக ஆட்சியில் கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சி காலத்தில் குறைவான நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறும் கருத்து தவறானது எதையும் புள்ளி விவரத்தோடு பேச வேண்டும்.
முடிந்தால் அதிமுக ஆட்சிக்காலத்தில் எத்தனை பேருக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது என்பது தொடர்பாக புள்ளி விவரத்தோடு வெளியிட வேண்டும் என குறிப்பிட்டார் , சுகாதாரத்துறையில் எம்ஆர்பி , டிஎன்பிஎஸ்சி , NHM மூலம் ஏராளமான அரசுப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு பணிகள் வழங்குவதில் வெளிப்படை தன்மையும், தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே பணி வாய்ப்பும் வழங்குவதை அரசு உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
தர்பூசணி கலப்பட விவகாரத்தை பொருத்தமட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே கலப்படம் நடைபெறுகிறது. உணவு பாதுகாப்புத்துறை தொடர்ந்து கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணியை பறிமுதல் செய்து வருகிறது.
எனவே மக்கள் யாரும் தர்பூசணி பழங்களை வாங்கி பருகுவதை தவிர்க்க வேண்டாம். கலப்படங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார் .

