திருச்செங்கோடு அருகே தனியார் அப்பார்ட்மென்ட்லிருந்து வெளியேற்றும் கழிவுநீர், சாலையை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த குமாரமங்கலத்தில் இருந்து சித்தாளந்தூர் செல்லும் ரோட்டில் உள்ள 87 கவுண்டம்பாளையம் ஊராட்சியில் மாரியம்மன் கோவிலுக்கு அருகே கோவையைச் சேர்ந்த கதிர்வேல் மற்றும் நந்த கோபால் என்பவர்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் சாக்கடை நீர் சாலையில் தேங்குவதால் அந்த பகுதி வழியாக வேலைக்குச் செல்லும் செட்டிசாலப்பாளையம், போக்கம்பாளையம், சமுத்திர பாளையம், போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் சாலையை கடக்க முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை வைத்தையடுத்து அந்தப் பகுதியை ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.