• Mon. Nov 11th, 2024

ஆவின் ஐஸ்கிரீம் திடீர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி

Byவிஷா

Oct 8, 2024

தமிழகத்தில் ஆவின் நிர்வாகம் ஐஸ்கிரீம் விலையை திடீரென உயர்த்தியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆவின் நிர்வாகம் தற்போது ஐஸ்கிரீம்களின் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி சாக்கோபார் உள்ளிட்ட பல்வேறு வகையான ஐஸ்கிரீம்கள் போன்றவைகளுக்கு விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஐஸ்கிரீம் விலையை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். அதோடு கடந்த 1-ம் முதல் ஆவின் நிர்வாகம் ஐஸ்க்ரீம் விலையை சத்தம் இன்றி உயர்த்தியதாக பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதன்படி 65 மில்லி சாக்கோபார் விலை மற்றும் ஆயிரம் மில்லி வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்றவைகளின் விலையை 5 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையில் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்தாத நிலையில் ஐஸ்கிரீம் விலையை உயர்த்தியது கண்டனத்திற்குரியது என்றும் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதோடு ஆவினுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய விலை உயர்வு கட்டாயமான ஒன்றாக இருந்தாலும் கொள்முதல் விலையை உயர்த்தினால் மட்டும்தான் ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *