• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் – தமிழக அரசு

Byகாயத்ரி

Apr 18, 2022

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் 6 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டார்கள். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் இருந்தே இதை எதிர்த்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள்.

இந்தப் போராட்டம் 19 ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை, ஓய்வூதியம் மற்றும் மருத்துவ காப்பீடு முதலிய எந்த பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது என்பதால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பழைய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி போராடி வருகிறார்கள்.இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இதையடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து வல்லுநர் குழு அளித்துள்ள அறிக்கையை பரிசீலித்து அதன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.