• Sat. Oct 12th, 2024

புற்றுநோயுடன் போராடும் பீலே

பிரேசில் கால்பந்து ஜாம்பவானான பீலே, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் 82 வயதான பீலே உடல்நலக்குறைவால் பிரேசில் நாட்டின் சாவ் பாலோவில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு திணறலால் அவதிப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. ஏற்கனவே பெருங்குடலில் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதன் தாக்கமும் குறையாமல் உடலில் சில பாகங்களுக்கு பரவியுள்ளது. சிறுநீரம், இதயம் சார்ந்த பிரச்சினைகளும் உள்ளன. இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை சார்பில் சமீபத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. டாக்டர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் சாவ் பாலோ மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *