அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவுநாளையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கினர். மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், பொன்னையன், பெஞ்சமின், பா.வளர்மதி, கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் ராஜேஷ், சத்யா, வேளச்சேரி அசோக், ஆதிராஜாராம், பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.
அண்ணா நினைவிடத்தில் இபிஎஸ் மலர் வளையம் வைத்து மரியாதை
