• Fri. Apr 19th, 2024

மகனுக்கு பட்டாபிஷேகம், அதிகார துஷ்பிரயோகம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

Byதரணி

Dec 14, 2022

மகனுக்கு பட்டாபிஷேகம், அதிகார துஷ்பிரயோகம், குடும்ப ஆட்சி, விலை வாசி உயர்வு ஏழை மக்களை வாட்டி வதைக்கும் இந்த திமுக ஆட்சி எப்போது வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் எடப்பாடியார் தலைமையில் எப்போது நல்லாட்சி மலரும் என்றும் தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர் என்று விருதுநகரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க விருதுநகர் மேற்கு மாவட்டம் விருதுநகர் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் விடியா திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மைய நூலகம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் ஒன்றிய கழக செயலாளர் மச்சராஜா தலைமை வகித்தார். சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமரன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கலாநிதி, கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், விருதுநகர் நகர கழக செயலாளர் முகமதுநயினார், ஒன்றிய கழக செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு கண்டன உரையாற்றி பேசும்போது,
கழக இடைக்கால பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க இந்த ஆர்ப்பாட்டம் தமிழக முழுவதும் நடைபெற்று வருகின்றது. விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திமுக அரசை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய திமுக ஆட்சியில் மகனுக்கு பட்டாபிஷேகம், அதிகார துஷ்பிரயோகம், குடும்ப ஆட்சி, மக்களைப் பற்றி சிந்திக்காத ஆட்சி, ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. இந்த திமுக ஆட்சி எப்போது வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் எடப்பாடியார் தலைமையில் எப்போது நல்லாட்சி மலரும் என்றும் தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர். ஆவின் பால் முதல் அனைத்து விலைகளும் கூடிவிட்டது. இன்றைக்கு வீட்டு வரி. சொத்து வரி. சிமெண்ட் விலை கூடிவிட்டது, செங்கல் விலை கூடிவிட்டது, மணல் விலை கூடிவிட்டது, மண் விலை கூடிவிட்டது, பாலா போன விடியா திமுக ஆட்சியிலே பால் விலையையும் கூட்டி விட்டனர். 500 ரூபாய் சொத்து வரி கட்டியவர்கள் இன்று 900 ரூபாய் கட்டி வருகின்றனர். 3000 ரூபாய் சொத்து வரி கட்டியவர்கள் இன்று 8000 ரூபாய் வரி கட்டுகின்றனர். திமுக ஆட்சிக்கு பொறுப்பேற்று பதினெட்டு மாதங்கள் ஆகிவிட்டது.. திமுக ஆட்சியில் விலைவாசிகள் தாறுமாறாக உயர்ந்து விட்டது. திமுக ஆட்சியின் தவறுகளை மறைப்பதற்காக எடப்பாடியார் மீது வீன்பழி போடுவது, மக்களை திசை திருப்ப ஏதாவது ஒரு பிரச்சனையை உருவாக்குவது போன்ற வேலைகளில்தான் திமுக ஈடுபட்டுள்ளது. இந்த ஆட்சியில் வீடு கட்ட நினைத்தாலும் வீடு கட்ட முடியவில்லை. 10 லட்சம் ரூபாய்க்கு வீடு கட்ட நினைத்தால் இன்று 15 லட்சம் செலவாகின்றது.அனைவரும் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கின்றார். வாக்களித்த நாட்டு மக்களை பற்றியோ, தமிழகத்தில் இளைஞர்களின் வாழ்க்கை பற்றியோ சிந்திக்க அவருக்கு நேரமில்லை. தனது குடும்ப உறுப்பினர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார். அண்ணா திமுக ஆட்சியில் அம்மாவுடைய ஆட்சியில் எடப்பாடியார் ஆட்சியில் ஏழை மக்களின் நலன் கருதி மக்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காகவே எந்த விலையையும் கூட்டவி்லலை. எந்த வரியையும் கூட்ட வில்லை. ஒரு சுபிட்சமான, சுகமான ஒரு நல்லாட்சியை கொடுத்தவர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். .ஒரு பொற்கால ஆட்சியை கொடுத்தவர் எடப்பாடியார் அவர்கள். அப்படிப்பட்ட ஆட்சி மீண்டும் வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர்கள் சரவணக்குமார். கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய கழக செயலாளர் ஆரோக்கியம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், விஸ்வநத்தம் மணிகண்டன், விருதுநகர் மின்சார பிரிவு செயலாளர் ஜெய்சங்கர், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் குருச்சந்திரன், வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ரவி, முன்னாள் நகரக் கழகச் செயலாளர் பி.ரவி, அண்ணா தொழிற்சங்கம் பால்ராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் வெங்கடேஷ், சரவணன், மிக்கேல்ராஜ், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் மருது, கழகப் பிரமுகர் அசரப்அலி, முன்னாள் நகர மன்ற தலைவர் சாந்தி மாரியப்பன், நகர எம்ஜி ஆர் மன்ற செயலாளர் நாகசுப்பிரமணியன், முன்னாள் நகர கழக செயலாளர் நாகராஜன், மாநில அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் சங்கரலிங்கம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் வேலாயுதம், நகரக் கழக துணை செயலாளர் கண்ணன், நகர அம்மா பேரவை செயலாளர் கணேஷ்குரு, அம்மா பேரவை செயலாளர் சக்திபாலன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சரவணன், அன்புராஜ், மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளர் மாதவன், ஒன்றிய பொருளாளர் பாண்டியராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ராமமூர்த்தி, மாணவர் அணி செயலாளர் சந்திரசேகரன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கலைவாணன், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், ராசாத்தி, சின்னச்சாமி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாகராஜன், ஒன்றிய துணை செயலாளர் நாச்சியம்மாள் மருதன், சங்கரலிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சிசுந்தரம், பிஆர்சி மண்டல தலைவர் உமாபதி, பிஆர்சி மண்டல பொருளாளர் முத்தியால் ராஜ், மாவட்ட வர்த்தக அணி தலைவர் செல்வராஜ், நகர கழக பொருளாளர் ஸ்ரீதரன், ஒன்றிய இளைஞர் பாசறை தலைவர் ஆத்தங்கரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்லச்சாமி, ஆமத்தூர் கிளை செயலாளர் கண்ணன், வடமலைகுறிச்சி தங்கமாரி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனி, அண்ணா தொழிற்சங்க கிளைத்தலைவர் செல்வகுமாரன், பிஆர்சி கிளை செயலாளர் கண்ணன், அண்ணா தொழிற்சங்க கிளை பொருளாளர் சந்திரகுமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவர் குமரவேல்ராஜன், ஒன்றிய சிறுபான்மை பிரிவு தலைவர் காதர், மாவட்ட தகவல் பிரிவு நல்லசிங்கம், நகர எம்ஜிஆர் இளைஞர் அணி கருப்புசாமி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் அமுல்ராணி, நகர பாசறை துணை செயலாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட மகளிர் அணி தலைவர் சரஸ்வதி சந்திரசேகரன், நகர இலக்கியஅணி செயலாளர் சந்தோஷ்பாண்டியன், ஒன்றிய கழக அவைத் தலைவர் சுந்தரபாண்டியன், ஒன்றிய இளைஞர் மற்றும் இளைஞர் பெண்கள் பாசறை செயலாளர் அசோக்குமார் சிவகாசி இளநீர் செல்வம், சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளா் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *