
சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் விஸ்வநாத சுவாமி கோவிலில் எழுந்தருளி உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை ஒட்டி முருகன் வள்ளி தெய்வானைக்கு தினசரி சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் தினசரி இரவு ஒரு வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.
எட்டாம் திருநாளான வெள்ளிக்கிழமை அன்று மாலையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது .ஒன்பதாம் திருநாளான நேற்று மாலை 4:30 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது ஏராளமான பக்தர்கள் முருகா முருகா என்று முழங்கியபடி தேர் வடத்தை பிடித்து இழுத்தனர் .

தேர் முக்கிய வீதிகளின் வழியாகசென்று இரவு 7 மணி அளவில் நிலைக்கு வந்து அடைந்தது. தேர் நிலைக்கு வந்ததும் தேரின் மேலிருந்து பக்தர்களை நோக்கி வாழைப்பழங்கள் வீசப்பட்டன.
இரவு புஷ்ப பல்லாக்கில் வள்ளி தெய்வானையுடன் முருகர் திருவீதி உலா வந்தார் .
பத்தாம் திருநாளான இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சியும் இரவு மயில் வாகனத்தில் முருகன் திருவீதி உலா வரும்நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவிற்கு வேண்டிய ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன் ,கௌரவ கண்காணிப்பாளர் ஆர் .எஸ் .ராமசாமி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
