தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் ந. அருள் நேற்று (சனிக்கிழமை ) சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை தமிழ் வளர்ச்சித் துறையின் சிவகங்கை மாவட்ட உதவி இயக்குனர் நாகராஜன் தலைமையில் பணியாளர்கள் சிறப்பாக வரவேற்றனர் . அப்போது சிவகங்கை எழுத்தாளர் அ. ஈஸ்வரன் “தான் எழுதிய எதிர்பார்ப்புகள்” – என்ற நூலை இயக்குனரிடம் வழங்கினார் . அந்த நூலுக்கு இயக்குனர் அவர்கள் ஏற்கனவே வாழ்த்துரை எழுதியிருந்தார்கள். அதன் அடிப்படையில் மரியாதை நிமிர்த்தமாக ஈஸ்வரன் இயக்குனரை சந்திக்கும்போது அவருக்கு சால்வே அணிவித்து கௌரவித்தார்.