பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் படுகாயம் அடைந்தார். மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேடு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டி தொடங்குவதற்கு முன் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் எம்எல்ஏக்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், விழாக் குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து, அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த ராஜன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாலமேடு பகுதியைச் சேர்ந்த அரவிந்த் ராஜன், காளை முட்டியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய வீரர் உயிரிழப்பு..!
