• Sat. Apr 27th, 2024

வரும் 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறையா..? அமைச்சர் விளக்கம்

ByA.Tamilselvan

Jan 16, 2023

ஜனவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் என்று 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 18-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து, “வரும் 18-ம் தேதி (புதன் கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *