உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையான நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 1,100 காளைகள் சீறிப்பாய்ந்தன. 900 வீரர்கள் மாடுகளை பிடிக்க முயன்றனர்.இதில் சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம் பிடித்தார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார். முதலாவதாக 7 கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகள் களம் இறங்க உள்ளன. 900 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக முதற்கட்டமாக காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை தொடங்கியது. 40 மருத்துவர்கள் உள்ளடங்கிய 120 பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழு பரிசோதனை செய்து வருகிறது