• Wed. Apr 23rd, 2025

பைரவா அறக்கட்டளை சார்பில் மாபெரும் நாய்கள் கண்காட்சி, மருத்துவ முகாம்!

ByT.Vasanthkumar

Jan 13, 2025

பெரம்பலூரில் பைரவா அறக்கட்டளை சார்பில் சிறப்பு கூட்டம் சிறுவாச்சூர் ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலயம் அருகே இன்று நடைபெற்றது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ரோட்டில் திரியும் பைரவர்களை (நாய்கள்) எடுத்து வந்து பராமரித்து, பாதுகாத்து, உணவு அளித்து வந்தவர்கள் மூலம்
கடந்த 2024 பிப்ரவரி 14-ம் தேதி பெரம்பலூரில் பைரவா அறக்கட்டளை துவங்கப்பட்டது.

இந்த அமைப்பின் சேவையை அறிந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகம் அவர்கள். பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள நாய்களை பராமரித்தால் நன்றாக இருக்குமே என்று அன்போடு கேட்டுக் கொண்டார்.

அத்துட்டன் பெரம்பலூர் முழுவதும் பைரவர்களை (நாய்களை) பராமரிக்க சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரா காளியம்மன் ஆலயம் அருகே அரசின் விலை இல்லா நிலத்தை வழங்க உத்தரவிட்டார். அதன் பின்பு அவர் பதவி உயர்வு பெற்ற பின்பும். பைரவா அறக்கட்டளை செயல்பாட்டுக்குரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருக்கும் கிரேஸ் பச்சாவ் மற்றும் அரசு அலுவலர்களும் கால்நடை அலுவலர்கள், மாவட்ட காவல்துறையினரும், சமூக ஆர்வலர்கள்,சமூக சிந்தனையாளர்கள், பைரவா அறக்கட்டளைக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில். பெரம்பலூரில் பைரவா அறக்கட்டளை சார்பில் சிறப்பு கூட்டம் இன்று சிறுவாச்சூர் ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலயம் அருகே நடைபெற்றது. அப்போது பைரவா அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தினை அறக்கட்டளையின் தலைவர் ஜெ.துரைராஜ், செயலாளர் தா.பாக்கியராஜ், பொருளாளர் அ.க.இலக்குவன், ஒருங்கிணைப்பாளர் தி.வசந்தகுமார் பார்வையிட்டனர். அங்கு நடந்த சிறப்பு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பைரவா அறக்கட்டளைக்கு உதவியாக இருந்த அரசின் துணைச் செயலாளர் க.கற்பகம் அவர்களுக்கும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்கிரேஸ் பச்சாவ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பைரவர்களை பாதுகாக்க மிகப்பெரிய குடில் கட்டுவதென தீர்மானிக்கப்பட்டது.

வருகின்ற 2025 ஆகஸ்ட் 26- ம் தேதி உலக நாய்கள் தினத்தன்று பைரவா அறக்கட்டளை சார்பில் மாபெரும் நாய்கள் கண்காட்சி மற்றும் மருத்துவ முகாம், நாய்கள் வளர்ப்பு பற்றி ஆலோசனை குறித்த ஆலோசனைகள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சுற்றியும் 10,000 மேற்பட்ட மூலிகை மரக்கன்றுகள் நடுவதன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் நன்கு படிக்கக்கூடிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கு தேவையான உதவிகளும் மேல்படிப்புக்கு தேவையான உதவிகளும் செய்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பைரவா அறக்கட்டளையின் துணைத் தலைவர் அ.டெல்பர்ட் சாமுவேல், துணைச் செயலாளர் இ.ரூபா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.