• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் – சேவாக் கணிப்பு

ByA.Tamilselvan

Sep 6, 2022

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என சேவாக் கணித்துள்ளார்.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இன்று இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடையே தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் கணித்துள்ளார்.”இந்தியா அடுத்து வரும் 2 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றாலும் பாகிஸ்தான் உடன்தான் மோதுவார்கள். அவர்கள் தற்போது நல்ல பலத்துடன் உள்ளனர்.ஐக்கிய அரபு அமீரக சூழலும் அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக உள்ளதால் பாகிஸ்தானுக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.