• Wed. Dec 11th, 2024

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி..!

Byவிஷா

Mar 25, 2023

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேய்கரும்பு பகுதியில் அமைந்துள்ளது அமிர்த வித்யாலயம் பள்ளி. இங்கேஇ உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கு இடையேயான ஓவியப்போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியைஇ தங்கச்சிமடம் சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
இந்த ஓவியப்போட்டியானது 3 பிரிவுகளில் நடைபெற்றது. 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை தண்ணீரை சேமிப்போம் என்ற தலைப்பிலும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை குடிநீரை சுத்திகரிப்போம் என்ற தலைப்பிலும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உலகத்தில் மாற்றம் ஏற்பட மாற்றம் முதலில் நம்மிடமிருந்து தொடங்கப்பட வேண்டும் என்ற தலைப்பிலும் போட்டியானது நடத்தப்பட்டது.