வாடிப்பட்டியில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஆலோசனையின் பேரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்களின் ஆலோசனையின் பேரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் சங்கரா கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. பேரூர் செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் தெய்வேந்திரன், முத்துப்பாண்டி முன்னிலை வகித்தனர். பேரூர் அவை தலைவர் கோபால், பொருளாளர் சோமநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ், செயற்குழு உறுப்பினர் நல். கர்ணன், பொதுக்குழு உறுப்பினர் சோனை முத்து, சோழவந்தான் பேரூர் செயலாளர் கிருஷ்ணன் ,மாவட்ட பொருளாளர் குமார், பேரூர் துணைச் செயலாளர் முருகன், பிரதிநிதி சங்கு பிள்ளை, மாவட்ட பிரதிநிதி மூர்த்தி, பேரூர் துணை செயலாளர் அரிமலை, பேரூர் பிரதிநிதி வைக்கோல் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவர்கள் செலின் மேரி ,சுவாதி உள்ளிட்ட மருத்துவ குழுவினரிடம் வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டு தங்களின் கண் பரிசோதனை செய்து ஆலோசனைகள் பெற்றனர்.