



எது தேவையில்லை…
எது தேவையில்லை என்பதில்
தெளிவாக இருந்தால்.
எது தேவை என்று தேர்வு
செய்வது சுலபம்.

சோதனையைக் கொடுத்த கடவுளுக்கு
வெற்றியை கொடுக்க
ஒரே ஒரு நொடி போதுமானது!
முயற்சியைக கைவிடாதே!!
இலக்கில் கவனமாயிரு.
பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை,
பெயர் சொல்லும் படி வாழ்வதே வாழ்க்கை..!
உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்
எண்ணம் அழகானால்
எல்லாமே அழகாகும்…
காலையில் மனதில் உதிக்கும் நம்பிக்கை, அந்த நாள் முழுவதும் உங்களுக்கு மனதில் பலத்தைத் தரும்.
வெறும் வளர்ச்சி எவரையும் மனிதனாக்குவதில்லை சிந்தனை தான் மனிதனை உருவாக்குகிறது.
இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்
விட்டுக் கொடுங்கள்
விருப்பம் நிறைவேறும்
தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும்
மனம்விட்டுப் பேசுங்கள்
அன்பு பெருகும்.
தேன் கூட்டில் இனிப்பது தேனல்ல
“உழைப்பு”
கூட்டை பிளந்து வெளியே வருவது குஞ்சுகளல்ல ழூ”விடாமுயற்சி”.
பாறைகளின் இடுக்குகளில் வளர்வது தாவரங்கள் அல்ல “தன்னம்பிக்கை”.
தோல்வி உங்களை துரத்தினால்
வெற்றியை நோக்கி ஓடுங்கள்.
என்ன நடந்தாலும் எடுத்த கொள்கையில் உறுதியாய் இருங்கள்.
ஏனென்றால், புதிய பாதையில் பயணிக்க முயற்சிக்கும் போது ஆதரவுகளை விட,
எதிர்ப்புகளையும் பயத்தை விதைப்பவர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
துணிவோடு செயல்பட்டு வெற்றி பெறுங்கள்.
புத்திசாலித்தனத்துக்கும், முட்டாள்தனத்துக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால்.
புத்திசாலிக்குத் தன் எல்லை தெரியும்.
பிறந்த வளர்ந்தக் காலத்திலிருந்துக் கணக்கிட்டால்..
எத்தனை உறவுகள்..
எத்தனைப் பிரிவுகள்..
அத்தனையும் மாறிக் கொண்டே இருக்கும்..
ஆசைக்கும் தேவைக்குமான எதுவும் நிரந்தமில்லை தான்.
அவை காலந்தோறும் மாறி வரும்.
எதிர்பார்ப்பற்ற நேசமொன்றே
எப்போதும் நிரந்தமாகும்.
நிரந்தரமான உறவுக்கு..

