• Mon. Apr 28th, 2025

படித்ததில் பிடித்தது 

Byவிஷா

Apr 9, 2025

1. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்த மாட்டான்.மரக்கன்று வைத்தவன் தான் தண்ணி ஊத்துவான்.

2. சௌகரியம் போல் வைத்து கொள்ளலாம் என்பதால் தான் தலைமுடி விக்குக்கு சவுரி என பெயர் வந்தது.

3. குரைக்கும் நாய் கடிக்காது என்பது நமக்கு தெரியும்.ஆனால் நாய்க்கு தெரியாது. ஏனெனில் நாய்க்கு படிக்க தெரியாது.

4. நாய் நாக்கை பயன்படுத்தாமல் வாலை பயன்படுத்தினால் அதற்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.

5. ஜலதோஷம் பிடித்திருக்கும் கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது. எல்லாக் கழுதைகளும் எப்போதும் ஜலதோஷத்துடனே இருக்கின்றன.

6.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.