• Mon. Jan 20th, 2025

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 1, 2025

யாரையும் அற்பமாக
நினைத்து விடாதீர்கள்..
சிறிய தீக்குச்சியின் வலிமை தான்
பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது..!

தேவையற்ற எண்ணங்களை
நீ சுமக்கும் வரை உன் வாழ்வில்
நிம்மதி என்பது சாத்தியம்
இல்லாததாகவே இருக்கும்..!

வாழ்வில் ஒரு சிலரை நிராகரிக்க
கற்றுக் கொள்.. நிம்மதியும்
நிறைவும் நிலைக்கும்..!

எல்லாவற்றையும் எல்லாரிடமும்
சொல்லாதே.. சிலரிடம் கேட்பதற்கு
காதுகள் இருக்கும் புரிந்து
கொள்வதற்கு மனங்கள் இருக்காது..!