நாம் எல்லா நேரத்திலும்
ஒரே மாதிரி இருப்பதில்லை
என்பதை விட..
இருக்க விடுவதில்லை
என்பதே உண்மை.
தவறான பதிலை விட
மௌனம் மிகச்சிறந்தது..
எதிரியை அடக்குவதை விட
உன் நாக்கினை அடக்குவதே
மிகச்சிறந்தது.
வாழ்க்கையில் சந்தோஷம்
என்பது யாருக்கும் தானாக
அமைவதில்லை.. நாம் தான்
அமைத்துக்கொள்ள வேண்டும்.
உலகில் அனைத்து
பிராத்தனைகளுக்கும்
பின்னால் சில ஆசைகள்
ஒளிந்திருக்கின்றன.
நம் ரசனையுடன் ஒத்து வரும்
ஒருவர் கூட நம்மை சுற்றி
இல்லாமல் இருப்பதும்
ஒருவகை தனிமையே.