• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தா.பேட்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு..!

ByJawahar

Jan 26, 2023

தா.பேட்டையில் 30 கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் கொள்முதல் நிலையத்தை முசிறி தொகுதி எம்எல்ஏ திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை ஒன்றிய பகுதிகளில் விவசாயம் பிரதானமான தொழிலாக இருந்து வரும் நிலையில் இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் முசிறி தொகுதி எம்எல்ஏ ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் நெல் கொள்முதல் செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசுத்துறை அலுவலர்கள் திமுக கட்சி நிர்வாகிகள் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.