• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அமைச்சரை சாடிய பா.ரஞ்சித்! ரஞ்சித்தை லெப்ட் ரைட் வாங்கும் நெட்டிசன்கள்!

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வரும் ராஜேந்திரனை சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் தெரிவித்துள்ளார்.

ராஜேந்திரன் புகாரின் அடிப்படையில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத் துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விவாகரம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித், அமைச்சர் ராஜகண்ணப்பனை கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், “சாதி வெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை! தமிழர்களுக்கு? தெலுங்கர்களுக்கு? அட எந்த மொழி பேசுபவர்களுக்கும் பிறப்பின் வழி கிடைத்த மூலதனம் (அயோக்கிய தனம்)! சாதியை அறிந்தவர், எதிர்ப்பதின் மூலமாக சமூக நீதி அமைக்க முயற்சிக்கிறார்! அறியாதவன் திரு.ராஜ கண்ணப்பன் ஆகிறார்!” என்று கூறியுள்ளார்.

பா. ரஞ்சித்தின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்ஸ், நீங்கள் எடுக்கும் படத்தில் அனைத்திலும் ஒரு சாதியை மட்டுமே முன்னிறுத்தி உள்ளது. இதை உங்களால் மறுக்க முடியுமா ? இன்னும் சாதியை தூக்கிட்டே எத்தனை நாளைக்கு? .. ரொம்ப கேவலமா இருக்கு.. வி.பி.துரைசாமி கையை காந்தி எம்.எல்.ஏ தட்டிவிட்டதை ஏன் கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பல நெட்டிசன்கள் ரஞ்சித்தின் பதிவு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்!