பணம் இல்லாத காரணத்தால் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய பெண்ணிடம் 80 ஆயிரம் ரூபாய் பணம் கட்டினால் மட்டுமே அசல் சான்றிதழ் வழங்கப்படும் என 8 ஆண்டுகளாக கல்லூரி நிர்வாகம் அலைக்கழிப்பு.
தேனி மாவட்டம் அல்லிநகர பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமுருகன் மகள் வீரலட்சுமி, இவர் அன்னை டோரா செவிலியர் கல்லூரியில் செவிலியர் படிப்பில் சேர்ந்தார்.
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை செவிலியர் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் படித்து முடித்த பின்னர் நான்காம் ஆண்டுக்கு போதிய பண வசதி இல்லாததால் கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டார்.
தற்பொழுது வீட்டில் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வீரலட்சுமி தன்னுடைய அசல் சான்றிதழ்களை அன்னை டோரா செவிலியர் கல்லூரியில் வாங்க பலமுறை சென்று அவர்கள் 80 ஆயிரம் பணத்தை கட்டினால் மட்டுமே அசல் சான்றிதழ் வழங்கப்படும் என தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக வீரலட்சுமி அலக்கழிப்பு செய்து வருகிறது.
எனவே இது குறித்து உடனடியாக தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வர் தலையிட்டு வீரலட்சுமி அசல் சான்றிதழ் பெறுவதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும் என வீரலட்சுமி கோரிக்கை விடுத்து வருகிறார்.