நாகலாபுரம் கிராமத்தில் எஸ்.கே.எம். கம்பெனி நீர்நிலை கண்மாயை அழித்து, கம்பெனியிலிருந்து வெளியேறும் கழிவுகளை பி. டி. ஆர். கால்வாயில் விடுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராம பகுதியில் எஸ். கே. எம். கம்பெனி செயல்பட்டு வருகிறது.
இந்த கம்பெனியின் அருகே உள்ள நீர்நிலை கண்மாயை அழிக்க அருகே உள்ள வனப்பகுதியில் உள்ள கனிம வளங்களை முறைகளாக ஜேசிபி, ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரா வாகனங்களை கொண்டு வெட்டி எடுத்து கண்மாயை அழிக்கும் நோக்கோடு மண்ணை கொட்டி வைத்து வருகின்றனர்.
மேலும், இந்த கம்பெனியில் முட்டை உற்பத்தி மற்றும் கோழிக்குஞ்சு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கழிவுகள் முழுவதும் அருகே உள்ள பி. டி. ஆர். கால்வாயில் விடப்படுவதால் அப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மாசடைந்து துர்நாற்றம் ஈசி வருகிறது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வேளாண்மை துறையினர், மாசுக் கட்டுப்பாடு வாரியம், சுகாதாரத்துறையினர், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை அருகே உள்ள விவசாயிகள் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து வருகின்றனர்.
எனவே நீர்நிலை கண் மாயை அழித்து, கம்பெனியிலிருந்து வெளியேறும் கழிவுகளை பி டி ஆர் கால்வாயில் விடுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக பி. டி. ஆர். கால்வாயில் தேங்கும் கழிவு நீரை கால்நடைகள் அருந்துவதால் கால்நடைகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து வருகின்றனர்.