


பிஎஸ்என்எல் வழங்கும் இணைய சேவையை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயன்படுத்த வேண்டும் என மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
ஏப்ரல் 2025 முதல் எஸ்பிடி அலுவலகம் நேரடியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இணைய சேவை கட்டணத்தை வழங்கும். இணைய சேவை ஏற்படுத்தப்படாமல் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் பிஎஸ்என்எல் வாயிலாக இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும். பிற இணையதள சேவை நிறுவனங்கள் மூலமாக சேவை பெற்றுள்ள அரசுப் பள்ளிகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சம்க்ர சிக்ஷா திட்டத்தின் மூலம் இணையதள வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

