• Thu. Mar 28th, 2024

விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க உத்தரவு

விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா தனது பணி காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து முந்தைய அதிமுக அரசு ஆட்சிக்காலத்தில் சூரப்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணையம் சூரப்பாக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரித்து அதற்கான அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த சூழலில் ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில் நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கையின் நகலை வழங்க சூரப்பா கோரிக்கை விடுத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு தரப்பிலோ, விசாரணை அறிக்கையில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்றும் அதை சூரப்பாவிற்கு தர இயலாது என்றும் வாதிட்டது. ஆனால் அறிக்கையை வேந்தர் முடிவு எடுப்பதற்கு முன்பாக அறிக்கையை வழங்கினால் தான் சம்பந்தப்பட்ட நபருக்கு இந்நிலையில் கலையரசன் ஆணையத்தை எதிர்த்து, சூரப்பா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் , அண்ணா பல்கலை. துணை வேந்தராக இருந்தபோது, பேராசிரியர் பணி நியமனங்களில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் நீதிபதி கலையரசன் குழுவின் விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேந்தராகிய ஆளுநருக்கு அனுப்பும் முன் அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி பார்த்திபன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.வாய்ப்பு அளிக்க முடியும் என்று நீதிபதி பார்த்திபன் கருத்து தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *