• Tue. Mar 28th, 2023

ஓபிஎஸ் ஆதரவாளருக்கு கத்திக்குத்து!!

ByA.Tamilselvan

Jul 11, 2022

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு பரஸ்பரம் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதிமுக தலைமை அலுவலகம் பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர் மீது ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செலம் ஆதரவாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்த நிலையில், ஓபிஸ் தலைமை அலுவலத்தில் நுழைந்துள்ளார். இதனிடையே ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டதால் அப்பகுதியே பதற்றத்துடன் இருக்கிறது. காயம் அடைந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். போலீசார் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை விரட்டியடித்துள்ளனர். அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *