• Mon. May 20th, 2024

கோவையில் பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து விளையாட்டு பயிற்சி

BySeenu

May 8, 2024

கோவையில் பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து விளையாட்டு பயிற்சிகளை வழங்கும் விதமாக ஸ்போர்ட் ஹுட் யுனைடெட் ட்ரீம் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து பிஷப் அம்புரோஸ் கல்லூரி வளாகத்தில் கால்பந்து பயிற்சி மையத்தை துவங்கியது.

தமிழகத்தில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக தொடர்ந்து கால்பந்து பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக பிரபல ஸ்போர்ட் ஹுட் யுனைடெட் ட்ரீம் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் தனது பயிற்சி மையத்தை துவக்கியது.கோவை பிஷப் அம்புரோஸ் கல்லூரி வளாகத்தில் துவங்கியுள்ள இதற்கான துவக்க விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.பிஷப் அம்புரோஸ் கல்லூரியின் செயலாளர் ஆயர் டாக்டர் ஜெரோம் தலைமையில் நடைபெற்ற விழாவில்,சிறப்பு விருந்தினராக ஸ்போர்ட் ஹுட் இணை நிறுவனர் சீப் ஆபரேட்டிங் ஆபிசர் அருண் வி.நாயர் கலந்து கொண்டு புதிய பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார்.இந்த விழாவில், ஸ்போர்ட்ஸ் ஹுட் அகாடமியின் வெளி தொடர்பு மேலாளர் ஷபீக் முகம்மது, யுனைடெட் ட்ரீம் அகாடமியின் செயலாளர் ஷாஹீன் அகமது,,தலைமை பயிற்சியாளர் சந்தோஷ் டிராபி முன்னால் தலைமை தலைமை பயிற்சியாளர் அஸ்மத்துல்லா,பிஷப் அம்புரோஸ் கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குனர் வேணுகோபால்,யு.டி.எஸ்.அகாடமியின் தலைமை நிர்வாகி சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.கோடை கால விடுமுறையில் துவங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்தில் எட்டு வயது முதல் பதினேழு வயது வரையிலான மாணவர்களுக்கு கால்பந்து விளையாட்டு தொடர்பான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட இருப்பதாகவும்,வரும் காலங்களில் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் அதிக வீரர்கள் உருவாக்குவதே இது போன்ற பயிற்சி மையங்களை உருவாக்குவதன் நோக்கம் என அகாடமி நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் இந்த மைதானத்தை விரைவில் புற்கள் கொண்ட மைதானமாக மாற்ற பணிகள் துவங்கப்படும் என தலைமை பயிற்சியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *