• Thu. Apr 18th, 2024

ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு எதிர்ப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் இபிஎஸ் ஓபிஎஸ் இரண்டு அணிகளும் தனித்தனியே களம் இறங்கி உள்ளனர். முன்னாள் எம்எல்ஏ தென்னரசு தங்கள் அணி வேட்பாளராக அறிவித்தார் இபிஎஸ். அதை தொடர்ந்து ஓபிஎஸ் தன் அணி சார்பாக செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்தார்.
இபிஎஸ் அறிவித்துள்ள வேட்பாளர் தென்னரசு பற்றி இரண்டு அணிகளுக்குமே நன்றாக தெரியும். இபிஎஸ் குரூப்பில் இரட்டை இலை சின்னம் ஒன்றுதான் எதிர்பார்ப்பு ஆனால் ஓபிஎஸ் குரூப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் யார் என்று அண்ணா திமுகவில் ஒரு தொண்டனுக்கும் தெரியாது. ஒன்னாம் தேதி மாலை ஓபிஎஸ் வேட்பாளரை சென்னையில் இருந்து அறிவித்தார்

அப்பொழுது தான் தெரியும் செந்தில் முருகன் என்று ஒரு நபர் இருக்கிறார் அப்போதுதான் எல்லோரும் தெரியவந்தது யார் இந்த செந்தில் முருகன் என்று ஆளாளுக்கு கேட்டுக் கொண்டனர். பத்திரிகை மற்றும் மீடியா குரூப் அனைவரும் வேட்பாளர் யார் என்று சல்லடை போட்டு தேடினர். யாரிடமும் உடனடியாக செந்தில்முருகன் பற்றி பயோடேட்டாவும் போட்டோவும் உடனே கிடைக்கவில்லை சுமார் ஒரு மணி நேரம் கழித்து தான் அவர் பற்றி விவரமாக வெளிவந்தது முதலியார் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் கட்சியில் எந்த பொறுப்பும் இல்லை வெறும் அடிப்படை உறுப்பினர் தகுதியோடு மட்டும் அவர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவ்வளவு ஏன் ஓபிஎஸ் அறிவிக்கும் போது கூட செந்தில் முருகன் என்பவர் வேட்பாளர் என்று தான் கூறுகிறார் அதாவது அதிமுகவில் யாருக்கும் அவரை தெரியாது என்று அவரே உணர்ந்து என்பவர் வேட்பாளர் என்று கூறுகிறார்

ஓபிஎஸ் அணியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் மீது அனைவரும் பெரும் எதிர்ப்பை காட்டி வருகின்றனர் இதனால் வரை ஓபிஎஸ் அணியில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் முருகானந்தம் நிறுத்தப்படுவார் என்று பேசப்பட்டு வந்தது அல்லது துணை செயலாளர் கார்த்திக் நிறுத்தப்படுவார் என்று அலசப்பட்டது திடீர் திருப்பமாக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டவுடன் ஓ பி எஸ் அணி நிர்வாகிகள் தங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்ததுடன் பேசாமல் இருந்து விட்டனர்

ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் முருகானந்தம் வேட்பாளராக இல்லை என்றதும் அந்த அணியை சேர்ந்த அனைவரும் அப்செட் ஆகினர் முருகானந்தமும் சைலன்ட் ஆகிவிட்டார் யார் செந்தில் முருகன் அவர் எப்படி வந்தார் என்று இரவு முழுவதும் தீவிரப்புலன் விசாரணை இறக்கி உள்ளனர் ஓபிஎஸ் அணியினர் இன்று விடியற்காலை அவர்களுக்கு அதற்கான ரிசல்ட் கிடைத்துவிட்டது

வேட்பாளர் செந்தில் முருகன் ஓபிஎஸ் வாரிசு ரவீந்திரனுடன் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ஒன்றாக படித்தவர்களாம். ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் கடைசி நேரத்தில் இபிஎஸ் அணி எதிர்ப்பாராதமாக ஓபிஎஸ் வேட்பாளரை விலைக்கு வாங்கி விட்டால் என்ன செய்வது என்று முன் ஜாக்கிரதையாக தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவர் வேட்பாளராக இருந்தால் தான் சாத்தியம் என்று ஓபிசி வாரிசுகள் முடிவெடுத்து தங்கள் கல்லூரி நண்பரே வேட்பாளராக அறிவித்தார்கள் என்கிறார்கள் எல்லோரும் வேட்பாளருக்கு தான் டம்மி வேட்பாளர் போடுவார்கள் ஆனால் ஓபிஎஸ் வேட்பாளரையே டம்மியாக அறிவித்திருப்பது அந்த அணிகள் நிர்வாகிகள் எரிச்சல் அடைந்துள்ளனர் அது மட்டும் அல்ல இந்த வேட்பாளர் செலவு செய்வதற்கு வசதி இல்லை பதிலாக ஈரோடு சோலார் பகுதியில் இயங்கி வரும் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் காண்ட்ராக்டர் ஒருவர் ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் டர்ன் ஓவர் செய்து வருகிறாராம் அவரும் ஓபிஎஸ் வாரிசுகளின் கல்லூரி தோழராம் ஆக கல்லூரி தோழர்கள் குரூப் ஒன்று வேட்பாளர் தேர்வில் மும்முரமாக இருக்கிறது.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டேன் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கொதித்துப் போயிருக்கின்றனர் என்கிறார்கள் ஈரோடு மாவட்டத்தில் அதிமுக கட்சியில் அவர் அணியில் இவ்வளவு காலம் அரசியல் செய்தது கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது ஆனால் யார் என்று தெரியாமல் ஒருவர் வேட்பாளராக அறிவித்தது ஓபிஎஸ் இன் சரிவு காலம் ஆரம்பம் ஆகிவிட்டது என்கிறார்கள் அவர் அணியை சேர்ந்தவர்களே. அனேகமாக வேட்பாளர் வாபஸ் பெரும் கடைசி நாள் வரை கூட செந்தில் முருகன் மாற்றப்பட வாய்ப்பு இருக்குமா என்று கொஞ்சம் ஓவராக தான் எதிர்பார்த்திருக்கிறார்கள் நிர்வாகிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *