• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை நகர் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

ByG.Suresh

May 8, 2024

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.இதனால் பொது மக்கள் முதியோர் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தலை திறக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியினை சிவகங்கை திமுக சார்பில் நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் மற்றும் கவுன்சிலர் வீனஸ்ராமநாதன், அயலக்க அணி மாவட்ட தலைவர் கேப்டன் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு நீர்,மோர், தர்பூசணி, இளநீர், சர்பத் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர் ஜெயகாந்தன், நகர்மன்ற துணைத்தலைவர் கார் கண்ணன், ராமதாஸ் , ராஜபாண்டியன், விஜயகுமார், கீதா கார்த்திகேயன், சி எல் சரவணன், வீரக்காளை, மதியழகன், ஆர் சரவணன், பிரேம்குமார், A A சேகர், ஆறுமுகம், சசி , நகர் இளைஞரணி ஹரிஹரன், திமுக மாவட்ட இளைஞரணி கிங் கார்த்திக், மதி,மகளிர் அணி பவானி, மஞ்சுளா, திலகவதி,மாவட்ட வழக்கறிஞர் அமுதன், நகர் தகவல் தொழில்நுட்ப அணி கார்த்தி. சட்டமன்ற தகவல் தொழில் நுட்ப அணி சதீஷ்குமார், திமுக கழக பேச்சாளர் வேங்கை பிரபாகரன், தமிழ் பிரியா, இளைஞர் அணி பிரபாகரன்,நகர்மன்ற உறுப்பினர்கள், நகர் கழக நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மூத்த முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.