• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் மகன் பாஜகவுக்கு தாவுகிறாரா ?

ByA.Tamilselvan

Jul 7, 2022

அதிமுகவில் தற்போதுயசிக்கலான சூழ்நிலையில் தனது தந்தை ஓபிஎஸ் நீக்கப்பட்டால் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பாஜகவுக்கு தாவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார், பாஜகவுக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுகவில், தந்தை ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிக்கல் அதிகரித்துவரும் நிலையில் பாஜகவில் இணைய விரும்பும் அவர் மத்திய இணை அமைச்சர் பதவி கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவின் போது கட்சிப் பதவிகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டால், ஓ.பி.ரவீந்திரநாத் பாஜகவுக்கு தாவுவது உறுதி என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அதே போல வரும் ஜூலை 11 அன்று நடக்க உள்ள பொதுக்குழுவில் தனக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படாவிட்டால் ஓபிஎஸும் பாஜக வுக்கு செல்லகூடும் என பேசப்படுகிறது.