• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் தனது வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் -அண்ணாமலை

ByA.Tamilselvan

Feb 4, 2023

ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் என அவரிடம் (ஓபிஎஸ்) கோரிக்கை வைத்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக பிரிந்து இரு அணிகளாக போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும்.இது தொடர்பாக தொலைபேசி வாயிலாக ஓ.பன்னீர்செல்வத்திடம் உரையாடினேன். நேற்று நேரில் சென்றும் அவரைச் சந்தித்து பேசினேன். ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும்
ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளரை விட எடப்பாடி பழனிசாமி வேட்பாளருக்கு உள்ளூரில் அதிக செல்வாக்கு உள்ளது. அதனால், ஓபிஎஸ் தனது வேட்பாளர் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இபிஎஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்என அவரிடம் (ஓபிஎஸ்) கோரிக்கை வைத்துள்ளேன். உள்கட்சி பிரச்னையில் நாங்கள் தலையிட முடியாது. அதிமுக சார்பில் ஒரு வேட்பாளரை இரட்டை இலை சின்னத்தில் நிற்கவைத்தால், பாஜக முழுமையாக களப்பணி செய்து வெற்றிபெற உழைக்கத்தயார். எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதால், நல்ல முடிவு இன்று மாலைக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.