• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் மனு..!

Byadmin

Jun 24, 2022

அ.தி.மு.க பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்னையில் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் கடும் அமளிகளுக்கிடையே நடைபெற்று முடிந்தது. அடுத்த பொதுக்குழுக்கூட்டம் ஜூலை 11ம் தேதி கூட்டப்படும் என புதிய அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன் அறவித்துள்ள நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்டம் கட்சி விதிகளுக்குப் புறம்பானது என்று தெரிவித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளி வருகின்றன.