



மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆகியோரது சந்திப்பு குறித்த கேள்விக்கு எல்லாம் நன்மைக்கே என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, டெல்லியில் திறக்கப்பட்ட அதிமுகவின் புதிய அலுவலகத்தை நேற்று பார்வையிட்டார்.

டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு மற்றும் அதிமுக – பாஜக கூட்டணி ஏற்படுமா என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,, “எல்லாம் நன்மைக்கே” என்று பதில் அளி த்து விட்டு, சட்டப்பேரவைக்குள் சென்றார்.

