• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தேனியில் கழக நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்., நேர்காணல்!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கழக நிர்வாகிகளுடன் நேர்காணல் நடந்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டு தேர்தலில் மனு செய்துள்ள கழக நிர்வாகிகளுடன் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கைலாசபட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நேர்காணல் நடத்தினார்.

இந்நிகழ்வில், தேனி மாவட்ட கழக செயலாளர் சையதுகான், கழக அமைப்புச் செயலாளர் ஜக்கையன், தேனி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். பார்த்திபன், மாவட்ட கழக துணைச் செயலாளர் முறுக்கோடை ராமர், மாவட்ட கழக பொருளாளர் சோலை ராஜ், மாவட்ட கழக இணைச் செயலாளர் மஞ்சுளா முருகன், துணைச் செயலாளர் வசந்தா நாகராஜ், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், செயலாளர்கள் M_சதக்கத்துல்லா, S.முருகேசன், வைகை கருப்பு ஜி, ASR_பாலசந்தர், தேனி நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்