



1944 ஆம் ஆண்டு பம்பாய் துறைமுகம் வளாகத்தில் விக்டோரியா டாக் என்கின்ற இடத்தில் எஸ் எஸ் போர்க் என்கின்ற சரக்கு கப்பல் தீ விபத்துக்கு உள்ளானது அப்பொழுது பம்பாய் துறைமுகத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு பம்பாய் தீயணைப்பு வீரர்கள் தீய அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 71 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர் வீர மரணம் இதனை போற்றும் வகையில் 1950 ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டு முதல் தீ தொண்டு இந்தியா முழுவதும் பணியின் போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த அஞ்சலி நிகழ்ச்சியானது. மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு அலுவலகத்தில் வளாகத்தில் தீத் தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி மலர் வளையம் வைக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய தென் மண்டல துணை இயக்குனர் சுரேஷ் கண்ணா துணை இயக்குனர் ராஜேஷ் கண்ணன் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் உதவி மாவட்ட அலுவலர்கள் பாண்டி செழியன் சுரேஷ் கண்ணா குமரேசன் ஆகியோர் அஞ்சலி அதேபோல மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு அலுவலகத்திலும் அனைத்து அதிகாரி மற்றும் வீரர்கள் வீரவணக்கம் செலுத்தி மலர் வளம் வைத்து அஞ்சலி செலுத்தினர் மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 100 பயிற்சி வீரர்களும் அஞ்சலியில் பங்கேற்றனர். வருகின்ற 20 தேதி வரை பள்ளி கல்லூரி மற்றும் தொழிற்சாலைகளுக்கு மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.


