• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தமிழகத்திற்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு

ByA.Tamilselvan

May 11, 2022

இலங்கை நடைபெற்றுவரும் வன்முறை போராட்டம் காரணமாக தமிழகத்திற்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் கடந்த 1 மாதத்திற்கு மேலாக கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பிரதமர் பதிவியிலிருந்து ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.ராஜபக்சே உள்ளிட்ட இலங்கை அரசியல் தலைவர்கள் 35 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் ஏரளாமான வாகனங்கள், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், இலங்கையில் வன்முறை வெடித்துள்ளதால் தமிழகத்திற்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கு தமிழக காவல்துறை, இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஹம்பந்தோட்டா சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியதாக தகவல் வெளியான நிலையில், அகதிகளோடு சேர்ந்து தேச விரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.சந்தேகப்படும்படி படகு உள்ளே நுழைந்தால் தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.