• Fri. Mar 29th, 2024

பிரதமர்களின் அருங்காட்சியகம் திறப்பு விழா

பிரதமர்களின் அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர்களின் செயல்பாடு, அவர்கள் நெற்றிக்கு ஆற்றிய பணிகள் குறித்து விலகும் விதமாக அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டது. அதனை இன்று நாட்டிற்கு பிரதமர்அர்ப்பணித்தார். பின்பு பேசிய பிரதமர் மோடி, ‘பிரதமர்களின் அருங்காட்சியகத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு என்பது எனக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என்று தெரிவித்தார். இந்தியா சுதந்திரம் அடைத்து 75 ஆண்டுகளில் எத்தனையோ பெருமைக்குரிய தருணங்களை கண்டெடுத்தது.

அதுபோல் இந்த அருங்காட்சியகமும் ஒரு சிறந்த உத்வேகமாக வந்துள்ளது; சுதந்திர இந்தியாவிற்கு பிறகு உருவான ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டை இன்று இருக்கும் உயரத்திற்கு கொண்டுசெல்வதில் பங்காற்றியுள்ளது. செங்கோட்டையில் இதுகுறித்து பலமுறை நான் பேசி வருகிறேன். இன்று இந்த அருங்காட்சியகம் ஒவ்வொரு அரசாங்கத்தையும் பகிரப்பட்டு, பாரம்பரியத்தின் வாழும் பிரதிபலிப்பாக மாறியுள்ளது. நாட்டில் ஒவ்வொரு பிரதமரும் அரசியலமைப்பின் ஜனநாயகத்தை நிறைவேற்றுவதில் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களை நினைவு கூறுவது சுதந்திர இந்தியாவின் பயணத்தை அறிவதாகும்.

இங்கு வரும் மக்கள் நாட்டின் முன்னாள் பிரதமர்கள் பங்களிப்பை அறிந்திருப்பார்கள். ஆனால் அவர்களின் பின்னணி, போராட்டம், உருவாக்கம் ஆகியவற்றை இதன்மூலம் அறிவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், நமது பிரதமர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் சாதாரண குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதும் இந்தியர்களாகிய நமக்கு பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. தொலைதூர கிராமங்களில் இருந்து வந்தவர்கள், மிகவும் எளிய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள், விவசாய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள், பின்பு பிரதமர் பதவியை அடைந்து, இந்திய ஜனநாயகத்தின் சிறந்த மரபுகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட இந்திய ஜனநாயக அமைப்பில் மிக உயரிய பதவியை அடைய முடியும் என்ற நம்பிக்கையை இந்த அருங்காட்சியகம் நாடு இளைஞர்களுக்கு அளிக்கும்’ என பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார். மேலும் இந்திய ஜனநாயகத்தின் மகத்தான அம்சம் தொடர்ந்து காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு சகாப்தத்திலும் ஒவ்வொரு தலைமுறைகளிலும் ஜனநாயகத்தினை நவீனமாகவும், அதிகரிக்க முயற்சிப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.

புதுமைகளை ஏற்கவும், புதிய யோசனைகளை ஏற்கவும் ஜனநாயகம் நம்மை ஊக்குவிக்கிறது. அதேபோல் உலகமும் நம்மை உற்றுநோக்கி பார்க்கிறது; இந்தியாவும் ஒவ்வொரு கணமும் புதிய கணங்களை எட்டுவதற்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *