

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், கடந்த சனிக்கிழமை (23.10.2021) அன்று நடைபெற்ற மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப. அவர்கள் தலா ஒரு கிராம் தங்க நாணயம் இன்று வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறாவது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் கடந்த சனிக்கிழமை (23.10.2021) அன்று நடைபெற்றது. அதில் 9 ஊராட்சி ஒன்றிய பகுதிகள் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் நபர்களில் அதிர்ஷ்டசாலியான 20 நபர்களுக்கும் (ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தலா 2 நபர்கள், மாநகராட்சி 2 நபர்கள்), மாவட்ட அளவில் 2 நபர்களுக்கும் என மொத்தம் 22 அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லலிதா, சூசைமுத்து, தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சு, லெட்சுமி, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஷீனா ஜோசப் அந்தோணி, பெலிஷ், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனந்த், தங்கசுவாமி, மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்டீபன் ராபேல், ஜோஸ் டேவிட்சன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேணுகோபால், திவ்யா, திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பென்னிஸ்மேரி, ரச்சலின் ரன்ஷியா, முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுனி சைலா, விஜயா, தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஷகிலா, ராதா, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஜாஸவா ஜெரின், பனிமேரி, மாவட்ட அளவில் பெர்ணாடு ஜெரின், அய்யப்பன் ஆகிய 22 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஸ்ரீ முகாம்பிகை மருத்துவக் கல்லூரி கல்வி குழுமத்தின் நன்கொடையாளர் உதவி மூலமாக இன்று தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது.
