• Fri. Jan 17th, 2025

*தேசிய கல்விகொள்கை திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி*

Byகுமார்

Oct 29, 2021

தேசிய கல்விகொள்கை திட்டம் தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பிய பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர் பணியிடமாற்றம், தேசிய கல்விகொள்கை திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம் – பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார்.

புதிய கல்விகொள்கை திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆசிரியர்களின் விவரங்களை கோரி மத்திய அரசு அனுப்பியுள்ள மின்னஞ்சலுக்கு பதில் அளித்ததோடு, ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர் அமுதவல்லியை பணியிடமாற்றம் செய்துள்ளதோடு, சுற்றறிக்கையை திரும்ப பெற்றுள்ளோம், தமிழகத்தில் மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதில் உறுதியாகவுள்ளோம் என்று கூறினார்.

இணை இயக்குனரின் செயல் எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது இனிமேல் எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் ஆலோசிக்காமல் பதில் அளிக்ககூடாது என்பதை கல்வித்துறை அதிகாரிகளுக்கு கூறியுள்ளோம். இணை இயக்குனர் யாரையும் ஆலோசிக்காமல் சுற்றறிக்கை அனுப்பியது வருத்ததற்குரியது. இது தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளோம்.

இல்லம் தேடி கல்வித்திட்டத்திம் குறித்து உரிய விளக்கமளித்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி காலை முதல் மாலை வழக்கம்போல பள்ளிகள் இயங்கும், மாணவர்களை பள்ளிகளுக்கு கட்டாயமாக வர வேண்டும் தனியார் பள்ளிகள் வற்புறுத்தக்கூடாது எனவும், உரிய பாதுகாப்புடன் மாணவர்களை வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் சேவையாற்ற பெண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும், இதுவரை 1லட்சத்திற்கு மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.

இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.