• Fri. Feb 14th, 2025

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம், தில்லியில் நடைபெற்று வருகின்றது.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றும் வரும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டுள்ளனர்.

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோதலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகு முதல்முறையாக அக்கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில், மத்திய அரசு பல்வேறு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளதால், இதுகுறித்து எம்.பி.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.