• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கார்த்திகை மாத கடைசி சோமவார தினத்தை முன்னிட்டு,சிவபெருமானுக்கு 1008 சங்காபிஷேகம் ..!

ByKalamegam Viswanathan

Dec 12, 2023

கார்த்திகை மாத கடைசி சோமவார தினத்தை முன்னிட்டு, திருநகரில் உள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதர் சன்னதியில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் சன்னதியில், கார்த்திகை மாத கடைசி சோமவார தினத்தை முன்னிட்டு, 1008 சங்குகளை வைத்து யாகசாலையில் சங்கினுள் தீர்த்தங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க 1008 சங்குகளில் உள்ள தீர்த்தங்களால் சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு தீப, தூப ஆராதனைகளுடன் சிவபெருமானுக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.